பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய சிறந்த விடயம் கல்வியே ஆகும். அதை பணத்தால் மதிப்பிட முடியாது. உயர் தரத்திலான சர்வதேச தரம்வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நல்ல கல்வியையே வழங்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 301 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 08 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்மார்ட் பிள்ளைகள் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். அதனூடாக ஸ்மார்ட் உலகளாவிய பிரஜை உருவாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.