இளைஞன் மற்றும் சிறுமி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை?

(எருவில் துசி) மட்டக்களப்பு வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை பகுதியில் இளைஞன் மற்றும் சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் (09-07-2024) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கெங்கநாதன் ரதன் மற்றும் 16 வயதுடைய புண்ணியமூர்த்தி பேஜினி சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். திக்கோடை தும்பாலை 4ஆம் வட்டார வீதியில் உள்ள  மரத்தில் தூங்கிய நிலையில் பொதுமக்களினால் குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவரும் காதல் விவகாரம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.