(ஹஸ்பர் ஏ.எச்) முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் காலஞ் சென்ற நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்மந்தன் அவர்களின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் (07) மாலை இடம்பெற்றது. அரசியல் பிரமுகர்கள், பெருந்திரளான மக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலித்தினர். இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர். பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இறங்கல் தெரிவித்து அமரர் இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டுள்ளது.. இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொண்டனர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக அன்னாரின் பூர்வீக இல்லத்தில் இருந்து பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் அமரர் சம்பந்தனின் பூதவுடல் அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு பூதவூடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி மரியாதை செலுத்துவதற்காக திருமலை சம்மந்தன் எம் பி யின் வீட்டிற்கு வந்து இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அரசியல் கட்சியின் தலைவர்களான ரவூப் கக்கீம், மனோ கணேசன், ரிஷாட் பத்யூதீன், மற்றும்பல கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியதன் பின் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டு பூதவுடல் மயானத்தில் எரிக்க எடுத்துச் செல்லப்பட்டன.