(எருவில் துசி) அமரத்துவமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலங்கை தமிழரசு கட்சிபின் தலைவருமாகிய அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கு எருவில் கிராமத்தில் அஞ்சலி.
களுவாஞ்சி குடி பிரதேச கிளையின் அஞ்சலி பொதுக் கூட்டமானது எருவில் கிராமத்தின் சிக்கன கூட்டுறவு சங்க மண்டபத்தில் எருவில் கிராமத்தின் வட்டார வேட்பாளரும் எருவில் தமிழரசு கட்சியின் உபதலைவருமாகிய அ.வசீகரன் அவர்களுடைய தலைமையில் இன்றைய(06) தினம் 10:30 மணி அளவில் அஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச தமிழரசு கட்சி தலைவர் குணம் மற்றும் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேசபை உப தவிசாளருமாகிய க. ரஞ்சினி கண்ணகி அம்பாள் ஆலய பரிபால சபை தலைவர் மா. சுந்தரலிங்கம் மற்றும் எருவில் கிராமத்தின் பிரமுகர்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தின் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் என பல்வேறுபட்டவர்கள் கலந்து கொண்டு அமரத்துவம் அடைந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவரும் ஆகிய சம்பந்தன் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு 91 வருடங்கள் அவர் இந்த தரணியில் வாழ்ந்ததை நினைவு கூறும் வகையில் 91 ஈகை சுடர்கள் ஏற்றி பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பல நூறு பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு அன்னர் தமிழுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் பாடுபட்ட பல்வேறு விடயங்கள் இந்த கூட்டத்தில் கருத்தாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.