மாவட்ட மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு செயன்முறையினை வலுப்படுத்தல் செயலமர்வு

ஹஸ்பர் ஏ.எச்_
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்  பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில்  SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது  SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரதேச செயலக  பிரிவுகளில் முரண்பாடுகளை  சாதகமான  முறையில் நிலைமாற்றம் செய்யவும்  மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுக்கவும்  உள்ளூர் மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு வழிமுறைகளை (ADR மன்றங்களை)வலுப்படுத்துதல்.

  ADR மன்றமானது  இலகுபடுத்தல் , ஒப்பந்த உடன்படிக்கை / பேரம் பேசுதல் , மத்தியஸ்தம் போன்ற அணுகுமுறைகளுக்கூடாக சமூக மட்ட பிணக்குகளை பயனுறுதிமிக்க வகையில் நிலைமாற்றம் செய்ய அல்லது தீர்ப்பதற்க்கு  சிறந்த ஒரு தலமாக உருவாக்கப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் SFCG இணைந்து  விழுது ஆற்றல் மேம்பாடு மையம் இத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜூலை மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் மூதூர் , தம்பலகாமம் பிரதேச குழுவினர்களை ஒன்றினைத்து  மாவட்ட மட்ட செயலமர்வு  மூதூர் பேல் கிரான்ட் அறையில் இடம்பெற்றது
இப் பயிற்சியின் மூலம் பிரதேசத்தில் ADR மன்றங்களுக்கு தேவையான பயிற்சியை சிரேஷ்ட சட்டத்தரனி  ஐங்கரன் குகதாசன் வழங்கினார்  ADR வழிமுறைகள், எழிதாக்குதல், மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை, மற்றும் நடுவர் ஆகியவற்றில் பகிரப்பட்ட அறிவு மற்றும் திறன்களுக்கான இடத்தை உருவாக்குவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்ட நடைமுறைகளை மேற்பார்வை செய்வதற்க்காகவும் இதன் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்க
SEDR திட்டத்தின்  குழுத் தலைவர் ஜாக் கார்ஸ்டென்ஸ். மற்றும் திட்ட முகாமையாளர் அல்டென் பெர்க்  மற்றும் திட்ட மேற்பார்வையாளர்  உதரா ஜெயசேனா மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கினைப்பாளர்   போனி வின்சென்ட் போன்றவர்கள் SEDR திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த உரையாடல், பிரதிபலிப்பு மற்றும் அவதானிப்புகளில் ஈடுபடுவதற்காக அவர்கள் திருகோணமலையை மூதூர் பகுதிக்கு வருகை தந்தனர்
இதன் போது  எம்.எஸ்.எம். நசீர், SFCG திட்ட மேலாளர் மற்றும் உவைசுல் கர்னி, SFCG  மாகாண ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு  நிறுவனத்தின் கள ஒருங்கினைப்பாளர்  டி.எம். ஹிஷாம் மற்றும் திருமதி இதையா போன்றவர்களும் கலந்து கொண்டனர்.