ரவ்பீக் பாயிஸ்
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் சொந்த ஊரான திருகோணமலையில் அமைந்துள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(05) மதியம் யாழ்பாணத்தில் இருந்து விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதஉடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களான சுமந்திரன்,குகதாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







