இலங்கை நாட்டில் பிரிவினைவாதம் இல்லாமல் ஒரு தாய் மக்களாக தந்தம் இனத்தின் அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழ வேண்டும். அதே வேளையில் இலங்கை நாட்டின் தேசிய கொடியின் கீழ் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றாக வாழ வேண்டும் என்ற உணர்வை கொண்டவர் அமரர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆவார். இக்கட்டான அரசியல் சூழலில் தளராமல் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்.
அதேவேளை எதிர்கட்சி தலைவராகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அனைத்து மக்களின் கருத்துகளையும் உள்வாங்கி அரசியல் சாணக்கியமாக செயற்பட்டவர். இலங்கை நாட்டினுடைய அனைத்து அரசியல்வாதிகளினாலும் மதிக்கப்படும் பெருந்தலைவராக வாழ்ந்தவர்.
அந்த வகையில் அன்னாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என சர்வமத தலைவர்களான வணக்கத்துக்குரிய கலஹம தம்மரன்சி தேரர், சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா, அல் செய்க் ஹசன் மௌலானா, அருட்தந்தை நிஷான்குரே ஆகியோர் கூட்டாக இணைந்து இவ் அனுதாப செய்தியை தெரிவித்துள்ளனர்.