எட்டு சனாதிபதிகளின் ஏமாற்று வித்தைகளின் கட்டுமானத்தைப் புரிந்தவர் காலத்தை முடித்து விட்டார்

பெருந் தலைவரின் பெரும் மூச்சு நின்றது   

மலர்வு – 05.02, 1933                       
உதிர்வு – 30,06.2024   

மூத்த தமிழ்த் தலைவர்  மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்    மூச்சை முடித்தார்
1977 இல் நாடாளுமன்றில்
ஆர்த்தெழுந்த குரல்
2024 இல் ஒலித்து அடங்கியது
மூத்த சட்டத்தரணி தனக்கான
முடிவுரையை எழுதி விட்டார்
மூத்த தமிழ்த் தேசியவாதி வாழ்வுக்கு
முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
மூத்த தமிழர் வழிகாட்டி
மூச்சை நிறுத்தி விட்டார்.
தமிழரின் விடுதலைக்காய்
தள்ளாடும் வயதிலும்
ஒலித்தவர் உயிர்விட்டார்.
திருமலையின் பெருமகனார்
தமிழர் தீர்வுக்காய் உழைத்தவர்
சென்று விட்டார்
இறுதிக் காலத்திலாவது
இனப் பிரச்சினை தீருமென்றிருந்த தலைவன் ஏக்கத்துடன் விடைபெற்றார் சுதந்திர இலங்கையை
அந்தர மாக்கிய
அத்தனை தலைவர்களின்
அகராதிகளை அறிந்தவர்
அகன்றுவிட்டார்.
நேர்மையாய் அரசியல் செய்தவர் கொழும்பில் நிரந்தர வீடற்றவர் நியாயத்தை உரைத்தவர்
நீதியைத் கேட்டவர்
நித்தியமாய் உறங்கி விட்டார்.  அறவழிப்போராட்ட காலம்
ஆயுத வழிப் போராட்ட காலம்
இரண்டையும் மதித்தவர்
இன்னுயிர் ஈத்தார்
எட்டு சனாதிபதிகளின்
ஏமாற்று வித்தைகளின்
கட்டுமானத்தைப் புரிந்தவர்
காலத்தை முடித்து விட்டார்.
கெளரவ அரசியலின் கனவான் காத்திரமான  உரிமைப செயலாளன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வாழ்வியலின் நெடுங்காலம் கண்டவர் மெய்வாழ்க்கை முடித்து
மேலகம் சென்று விட்டார். ஆத்மசாந்திக்காய் ஆண்டவனைப் பிரார்த்திப்போம் ……
அன்னாரின் பாதையினை
அழியாமல் காத்து நிற்போம்
தமிழ்த்தாயே தரமான மகனைத்
தந்ததற்கு நன்றியம்மா …
பதவிக்காய் பணத்திற்காய்
பகட்டுக்காய்ப் பலியாகாத
தமிழினப் பண்பாளனை
இழந்து விட்டோம்……
மரணத்தை வெல்ல மருந்து இல்லை
மனரணமாகிப் புலம்புகின்றோம் ஐயா…
ஞா.சிறிநேசன்.