கல்முனை வடக்குப்பிரதேச செயலக நிருவாகப்பிரச்சினைக்கு மிகவிரைவில் தீர்வு.கிழக்கு ஆளுநர்.

கல்முனை வடக்குப்பிரதேச செயலக நிருவாகப்பிரச்சினைக்கு மிகவிரைவில் தீர்வு எட்டப்படுமென கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று கல்முனைப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் தரப்பினரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சகிதம் சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இரு சமுகங்களும் பாதிக்கப்படாத வகையில் இருதரப்பினரின் கருத்துக்களையும் அறிக்கைகளையும் கருத்தில்கொண்டு இதற்கான தீர்வு எட்டப்படும்.

இருதரப்பினரினதும் கருத்தினை கேட்டுஅறிவதற்காக அடுத்தவாரம் மீண்டும்  கூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் பொது மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றோம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மிகவிரைவில்  பிரதேசசெயலகப்பிரச்சினையை தீர்த்துவைக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை கல்முனைப்பிரதேச அபிவிருத்திக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்திலிருந்து அதிகளவு நிதியினைபெற்று அபிவிருத்தியடைய செய்துள்ளார்கள் என பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு ஆளுநர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அதாவது அரசாங்கத்தின் பணம் இலங்கைப்பிரஜைகள் அனைவருக்கும் சொந்தம் இப்பணங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் சொந்தப்பணம்  இல்லை. இதன்ஊடாக பெறப்படுகின்ற அபிவிருத்திகளை சகல இனமக்களும் அனுபவிக்க உரிமையுள்ளது என்றார்.