(வாஸ் கூஞ்ஞ)
நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரணச்சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரனையையே கோரி நிற்கின்றோம் என தெரிவித்து மன்னார் நகரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
வெள்ளிக்கிழமை (28) காலை பத்து மணியளவில் மன்னார் நகரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
இவர்கள் தங்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு சர்வதேசம் இதுவரை தங்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதிருக்கின்றது எனவும்
உள்நாட்டு விசாரணையை தவிர்த்து சர்வதேசமே காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவினர்கள் தொடர்பான விசாரனையை மேற்கொள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்களின் போராட்டம் நடைபெற்றது.