மட்டு மேற்கில் தமிழ்மொழித்தின விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தின விழா கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று(25) இடம்பெற்றது.

இதன்போது, சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்திற்கு சுடேரேற்றி நினைவுகூரப்பட்டமையுடன் அவரால் பாடப்பட்ட வெள்ளை நிற மல்லிகையோ எனத்தொடங்கும் பாடலும் பாடப்பட்டது. விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டன. மேலும் வலயமட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்கற்கைகள் துறையின் முதுநிலை விரிவுரையாளர் ரூபி வலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.