( வி.ரி. சகாதேவராஜா)திருக்கோவில் கல்வி வலயத்தின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வின் அங்குராப்பண நிகழ்வானது இன்று (26) புதன்கிழமை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசீர் தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில்
வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.
காலை 9 மணியளவில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியம் கடேட் அணிவகுப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டி நிகழ்வுகளில் திருக்கோவில் வலயத்திற்கு உட்பட்ட 47 பாடசாலைகள் பங்கு பற்றிருந்தது.
இன் நிகழ்வுகளுக்கு ஏனைய அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான சோ.சுரநூதன் ஏ.நசீர் ஏ.நௌபர்டீன் கே.கமலமோகனதாசன்
திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் திருக்கோவில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் மற்றும் ஆசிரி லோசகர்கள், பாடசாலை ஆதிபர்கள், பயிற்று விற்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்..
கடந்த வருடம் கிழக்கு மாகாண மட்டத்தில் 2 ஆவது இடத்தைப்பெற்று சாதனைபடைத்தமைக்காக வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் உடற்கல்விப்கல்விப் பணிப்பாளர்களான கே.கங்காதரன் ஏ.நசீர் உள்ளிட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாகாண மட்ட சாதனை வீர வீராங்கனைகள் பரிசு வழங்கிபாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்தளித்தார்.
விளையாட்டு ஆசிரிய ஆலோசகர் கே.சதீஸ்குமார் நன்றியுரையாற்றினார்.