( வாஸ் கூஞ்ஞ) இலங்கையில் தேசிய நல்லிணக்கம்இ ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச ‘உண்மைஇ ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்’ வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான்கு விசேட கலந்துரையாடல்கள் செவ்வாய் கிழமை (25) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றன.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச அவர்களின் தலைமையில் வருகை தந்நிருந்த குழுவினரே பல தரப்பட்ட அபை;புக்களுடன் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடலின்போது 1983 – 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை , ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கு நடைபெற்ற நான்கு விசேட கலந்துரையாடல்களpல் ஒன்று அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , திட்டமிடல் பணிப்பாளர் , ராணுவ பொறுப்பதிகாரிகள் , மேன்மட்ட உயர் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுடனும் ,
இரண்டாவது கலந்துரையாடல் அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உடனும்
மூன்றாவது கலந்துரையாடல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன்இ முன்னாள் போராளிகள்இ அங்கவீன முற்றோர்கள் உடனும்
நான்காவது கலந்துரையாடல் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது குறித்த கலந்துரையாடல் மடு பிரதேச செயலாளர் உட்பட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்இ முன்னாள் போராளிகள்இ தங்கவீனமுற்றோர்கள் என்பவர்களுடன் இடம்பெற்றது.
இங்குஇ நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ஐளுவுசுஆ) தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்தும் முக்கியமாக இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் சார்பில் மன்னாருக்கு வருகை தந்தவர்கள் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உட்பட குறித்த செயலகத்தின் மேன்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
இக் குழுவினர் வடக்கு மாகாணத்தில் வவுனியா , மன்னார் , கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 24 ந் திகதி தொடக்கம் 27ந் திகதி வரை தங்கள் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.