கதிர்காமம் பஸ்சேவை 30 இல் ஆரம்பம்.

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பில் இருந்து உகந்தை மற்றும் கதிர்காமத்திற்கான  பஸ் சேவை எதிர்வரும் 28 ஆம் தேதி ஆரம்பமாகின்றது என்று மட்டக்களப்பு போக்குவரத்து சாலையின் அத்தியட்சகர் கந்தசாமி சிறிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இருந்து கதிர்காமத்திற்கான ஒரு வழி பாதை பயணத்திற்கான கட்டணம் 1050 ரூபாய். முற்பதிவுக்கு 35 ரூபாய்.
 காலையிலே ஆறு மணி ஏழு மணிக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகின்றன.
 அதேபோன்று கதிர்காமத்தில் இருந்து காலை 8 மணிக்கு ஒரு பஸ் புறப்படுகின்றது.
உகந்தை பஸ்சேவை 28 இல் ஆரம்பம்!
இதேவேளை மட்டக்களப்பில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கான பஸ் சேவையும் ஆரம்பமாகவிருக்கின்றது அதற்கான பஸ் கட்டணம்  800 ரூபாய் .முற்பதிவுக்கு 35 ரூபாய்.
40 பேர் சேர்ந்து தனியாக ஒரு பஸ் பெற்று கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். அடியார்களின் தொகை தேவைக்கேற்ப பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடி யார்களின் நலன் கருதி
தங்கள் இருக்கைகளை முழுமையாக 2024.06.20ம் திகதியிலிருந்து ஆசனப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து மூன்று பஸ்களில் பாதயாத்திரை குழுவினர் திருக்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.