சம்மாந்துறை வலய வலைப்பந்தாட்ட சாம்பியனாக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அணி தெரிவு.

(வி.ரி.சகாதேவராஜா)  சம்மாந்துறை வலய வலைப்பந்தாட்ட சாம்பியனாக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அணி வெற்றி வாகை சூடியது.
சம்மாந்துறை வலய மட்ட விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வலைப்பந்தாட்ட போட்டி நேற்று (19) புதன்கிழமை   சம்மாந்துறை அல் மல்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில்   நடைபெற்றது .
16 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் வீரமுனை ராமகிருஷ்ணா மகா வித்தியாலயம், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல் மல்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளைத் தோற்கடித்து நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அணி சாம்பியனாக வெற்றி வாகை சூடியது.
சம்மாந்துறை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபரா  முன்னிலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.