கார்மேல் பற்றிமாவில் சிரேஸ்ட மாணவதலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா.

(வி.ரி.சகாதேவராஜா)  கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC தலைமையில் (19) புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ்ரிபன் மத்தியூ கலந்து   சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்கா சந்ரசேன  மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர் .சுகிர்தராஜன் , முன்னாள் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர் திருமதி பி.திருநாவுக்கரசு,கல்முனை வலய ஆசிரிய ஆலோசகர் ரி.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
 கடந்தவருடம் தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட மாணவத்தலைவர்களாக கடமையாற்றிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கூடவே இடம் பெற்றது.
 இவ்வருடத்திற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு  சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர் தலைவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.