சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாரம் 2024.

(வேதாந்தி)

ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகத்தினால் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த மதிப்பளிப்பு வெற்றியாரம் 2024 நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் சுவிட்ஸர்லாந்து தலைநகர் பேர்ன் மாநிலத்தின் வேல்ப் நகரில் மதிப்பளிப்புக்கழகத்தின் தலைவர் செ..வைகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யோகாசன திறனாற்றுகை நிகழ்வு, பரதநாட்டிய நிகழ்வுகள், சிலம்பாட்டம், கராத்தே, இசைநிகழ்வுகள், நினைவுப்பேருரை, கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

கௌரவிப்பு நிகழ்வில் பல்துறைகளில் பிரசித்திபெற்றவர்களும் சிறந்த ஆளுமையாளர்கள் உட்பட பலர் கௌரவிக்கப்பட்டனர்.

வருடாவருடம் நடைபெறும் வெற்றியாரம் நிகழ்வில் இவ்வாண்டு சிறந்த ஆளுமையாளர்களாக கீழ்குறிப்பிடப்படும் ஆளுமையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.விக்கி நவரெட்ணம் (இலக்கியத்துறை), கந்தையா அருந்தவராஜா (இலக்கியத்துறை),  கந்தசாமி விநாயகமூர்த்தி (வர்த்தகத்துறை), இராமச்சந்திரன் கிசோர் (வர்த்தகத்துறை), திருமதி நிருபா குருபரன்  (சுகாதாரத்துறை), முல்லை சசி (கலைத்துறை) ,பாலேந்திரா ஜெயக்குமார் (விளையாட்டுத்துறை),கிருஸ்ணசாமி குகதாசன் (நீண்ட தூர துவிச்சக்கரவண்டி ஓட்டவீரர்), சேபியர் வின்சன்ட் யூட்( கிரிக்கட்) , சுவாம்பிள்ளை மன்மதன் (கராத்தே தற்காப்புக்கலை) ,செல்வி இசானா கண்ணதாசன் (விளையாட்டுத்துறை), பசுபதி யோகச்சந்திரன் (துவிச்சக்க வண்டி ஓட்டவீரர்).

நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்  மேலும் பல்வேறு ஆளுமையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனம் கௌரிதாசன் விபுலானந்தன், முனைவர் அருள்ராசா நாகேஸ்வரன் (கல்லாறு சதீஸ்) ,ஊடகவியலாளர் கனகரவி உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.