எதிர்காலத்திற்காக ஜனாதிபதி சந்தர்ப்பத்தை சஜித்திற்கு வழங்குங்கள்

ஐ.ம.ச அம்பாறை இணை அமைப்பாளர் வினோகாந்

(கஜனா)

பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது .

அன்று அரைகலைய சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சஜித் பிரேமதாசவை கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.அச் சந்தர்ப்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. தற்போது அந்த சந்தர்ப்பத்தை இந்த தேர்தலில் காட்டுங்கள் .என ஐக்கிய மக்கள் சக்தியின்  அம்பாறை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளரும் இளைஞர் சக்தியின் மாவட்ட செயலாளரும் ஆகிய வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்றைய தினம் (13)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்  கருத்தினை தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்கள் அவருக்கு எதிர்க்கட்சியத் தலைவராக இருப்பதற்கான ஆணையினை வழங்கியிருந்தார்கள். தற்போதைய சமகாலத்தில் அரசியல் சூழல் ஒன்று உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான சந்தர்ப்பம் ஒன்று உருவாகி உள்ளது. எனவே அறகலைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவியை ஏமாறு கூறியவர்கள் மற்றும் இந்த நாட்டு மக்களையும் பார்த்து கேட்கிறோம் ,நீங்கள் ஆசைப்பட்டதைப் போல் உங்கள் வாக்குகளை இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வையுங்கள் .

இன்று வானத்தைத் தொடும் அளவிற்க்கு விலைவாசிகள் உயர்ந்து விட்டன. மூன்று வேளை உண்ட சாதாரண மக்கள் இன்று இரண்டு வேளை உண்ணும் அளவிற்கு சென்று விட்டார்கள். இலங்கையினுடைய வாழ்வாதாரத்தை உலக அமைப்புகள் திட்டவட்டமாக 75 லட்சம் சதவீதமான ஆதாரத்திற்கு அங்கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் அனைத்து மாவட்டங்கள் தோறும் சென்று வைத்தியசாலைகளாக பாடசாலைகனாக இருந்தாலும் பார்த்து பார்த்து தனது சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார். இன்று வங்கியில் பல கோடி ரூபாய் வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் சஜித் பிரேமதாசவை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவை ஏட்டுச் சுரக்காய்க்கு உகந்ததாகவே கொள்ளப்படுகின்றது .

நாட்டில் தோன்றியுள்ள இந்த பெரிய பாதாளத்தை நாங்கள் மூட வேண்டுமானால் நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்போதுதான் வசித்த வயிற்றிற்கான ஆகாரம் உங்களை தேடி வரும் எனவே எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரம் கல்வி, இலங்கை என்பதோ அல்லது உலகம் என்பதோ எங்களுக்கானது மாத்திரமல்ல எதிர்கால சந்ததிக்கு உரியது. எனவே தற்போது இந்த அரசியல்வாதிகளின் அசமந்த போக்கினால் வங்குரோத்தை நோக்கி சென்றுவிட்டது .

இந்த வங்குரோத்தில் இருந்து விடுபட ரனில் விக்ரமசிங்கவினால் மாத்திரம் முடியாது. நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர் பெரிய வேலை செய்து கொண்டிருக்கின்றார் என்று. கடன் சுமைகள் கடனுக்கு மேல் கடன் சென்று கொண்டிருக்கின்றதே தவிர இந்த கடனை செலுத்துவதற்கான, மீண்டு வருவதற்கான எந்த திட்டமும் அவரிடம் இல்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அதற்கான திட்டங்கள் உண்டு.

சமகாலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து நல்லாட்சி அமைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் வந்து இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வித்தியாசமான கட்சிகள் மற்றும் கிராம மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் கூட இணைந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அம்பாறை தமனப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வெணுர, உகண பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர குமார், நாமல் ஓயா பிரதேச சபை உறுப்பினர் அணுர, தமன்னா பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கசுன், அம்பாறை மாவட்டம் முன்னாள் அமைச்சர் விமல் திசாநாயக்க வின் அமைச்சரவை காரிகாலத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள், கிராமமட்டத்தில் உள்ள மொட்டு கட்சியின் பிரதான தலைவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழுவினர் கொழும்பில் கடந்த 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் காரியத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கி மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச முன்னிலையில் அங்குத்துவத்தை பெற்றுக்கொண்டனர் .

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சி மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை  ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சிகள் ஈடுபட உள்ளதா அவர்கள் கூறியிருந்தார்கள். எனவே சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. என்பதற்கு இது ஒரு உதாரணம். இலங்கையில் உள்ள அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்துவம் பெற்று கொள்வதற்கான வாசல் திறந்து இருக்கின்றது .

ஜாதி மத பேதங்களைக் கடந்து நல்லாட்சியை வழங்க கூடிய தலைவரான சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு ,கொழும்பு ,மத்திய பிரதேசம், தமிழ் ,முஸ்லிம் ,சிங்களம் என பேதமில்லாமல் அவருடைய செயற்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்து கொண்டிருக்கின்றது .சஜித் பிரேமதா சபை ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைக்கக்கூடிய அனைவருக்கும் மன வாசல் திறந்து இருக்கின்றது. எதிர்காலம் எங்களுடைய பிள்ளைகளுக்கானது எனவே சஜித் பிரேமதாசவினால் நல்லதொரு எதிர்காலம் உங்களுக்கு அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளர் வெள்ளையன் வினோகான் தெரிவித்துள்ளார் .