தான் ஏறிய ஏணியை உதைக்காது மதிப்பளித்து புத்தகத்தை வெளியீடு செய்த அருட்பணி டேவின் கூஞ்ஞ

(வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் பேசாலையை பிறப்பிடமாகவும் திருவுளச் சபையைச் சேர்ந்தவரும் கண்டி தேசிய குருமடத்தின் மெய்யியல் பீடத்தின் விரிவுரையாளராகவும் , மட்டக்களப்பு மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் சிறிஸ்தவ நாகரீகத்துறையில் வலுவாளராகவும் மற்றும் குருக்கள் துறவியர்களின் வருடாந்த தியானங்களையும் வழங்கும் அருட்பணி மிக்கேல் டேவின் கூஞ்ஞ அடிகளாரால் எழுதப்பட்ட ‘மனத்தின் மறைவிதைகள்’ என்ற புத்தக வெளியீடு விழா திங்கள் கிழமை (10) பேசாலையில் இடம்பெற்றது.

வாழும்போதே வாழ்த்துவோம் என்ற உயரிய நோக்கில் கண்கண்ட தெயவங்களில் ஒன்றாக விளங்கும் தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்த ஆசிரியர்களான திருமதி யூடா யூட் மிராண்டா மற்றும் திருமதி மேரி அக்னஸ் சுவர்ணலதா மனுவேல் கூஞ்ஞ ஆகியோர் வாழும்போதே அவர்களை கௌரவித்து அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்து ஆசிரியர்களுக்கு நன்றி கடனாக இந்த நூலை வெளியீடு செய்தது இந்த நிகழ்வில் ஒரு விஷேட அம்சமாக காணப்பட்டது.

இதற்கு பிரதம அதிதியாக முன்னாள் திருவுளச் சபையின்  மாகாணத் தலைவர் அருட்பணி சாந்திகுமார் அடிகளார் மற்றும் வடக்கு மாகாண அமல மரி தியாகி சபையின் முதல்வர் அருட்பணி எஸ். ஜெயந்தன் பச்சேக் அடிகளார் விஷேட விருந்தினராகவும் , மாங்குளம் பனிக்கள்குளம் லெபாரா வெல்நஸ் சென்ரலைச் சேர்ந்த எழுத்தாளரும் பேச்சாளருமான அருட்பணி செ.அன்புராசா அடிகளார் (ஓஎம்ஐ) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதடன் பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் திருவுளச் சபையின்  மாகாணத் தலைவர் அருட்பணி சாந்திகுமார் அடிகளாரால் ‘மனத்தின் மறைவிதைகள்’ இப்புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது.

இங்கு பலரும் உரையாற்றும்போது தான் உயர்ந்த நிலைக்கு வந்தபோதும் தனது பாடசாலையான மன் பற்றிமா மத்திய மகா வித்தியாலயதத்pல் கற்பித்த ஆசிரியர்களை மறக்காது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வெளியீடு செய்யப்பட்டுள்ள புத்தகத்தை சமர்ப்பணம் செய்யப்பட்டதையிட்டு நூலாசிரியர் அருட்பணி டேவின் அடிகளாரை யாவரும் பெருமையாக உரையாற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.