(அபு அலா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு தனது கடமையை நேற்று (12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் SLAS – I அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி நிர்வாக சேவையில் இரு தசாப்தத்தை பூர்த்தி செய்துள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளருமாகவும் கடமையாற்றியதோடு இறுதியாக கல்முனை மாநகராட்சி ஆணையாளராக கடமையாற்றினார்.
இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராக பதவி வகித்து கூட்டுறவுத்துறையை பிரகாசிக்கச் செய்தவர் என்ற வகையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.