( வாஸ் கூஞ்ஞ) அதிபர்கள் , ஆசிரியர்கள் சம்பள முறன்பாடுகளை அரசு தீர்க்காமையினால் நாம் இப்பொழுது மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தாது போரட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அரசு இதற்கு செவிசாய்க்காவிடில் எமது போராட்டம் வேறு விதமாக முன்னெடுக்கப்படும் என மன்னாரில் நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுபோதினி என்ற ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அதிபர்கள் , ஆசிரியர்களின் சம்பள முறன்பாடுகளை அரசு தீர்க்க வேண்டும் எனக்கோரி நாடு பூராகவும் அதிபர்கள் ஆசிரியர்கள் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரிலும் புதன்கிழமை (12) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இருந்து புறப்பட்டு மன்னார் கல்வி வலயத்துக்கு முன்பாக நடைபெற்றது.
ஆசிரியர்களாகிய நாங்கள் (12) முன்னெடுக்கும் இந்த போராட்டமானது எங்கள் சம்பள உயர்வுக்காக அல்ல. மாறாக 1996ம் ஆண்டு முதல் ஆசிரியர் அதிபர்களின் சம்பளங்களை சீர் செய்யப்படாது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இது இருந்து வருகின்றது.
பல்வேறு அரசுகள் ஆட்சி செய்தபோதும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
-2016 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் சுபோதினி என்ற ஆணைக்குழுவின் அறிக்கையின்படி அதிபர் ஆசிரியர் சம்பளம் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சம்பளம் மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு அன்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
-இந்த தீர்மானம் தற்பொழுது வெறுமனே ஒரு அறிக்கையாகவே காணப்படுகின்றது. தொடர்ச்சியாக முப்பதுக்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 2020 , 2021 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களின் பின்னர் மூன்றில் ஒரு பங்கு அதிபர் ஆசிரியர் சம்பளதத்pல் உள்ளடக்கப்பட்டது.
-இருந்தும் அன்றைய அரசு தொடர்ச்சியாக அடுத்து அடுத்து காலப்பகுதியில் இந்த சம்பளத்தின் மிகுதியை பகுதி பகுதியாக வழங்குவதாக தெரிவித்திருந்தும் அது இதுவரை செயல்படுத்தாமலேயே இருந்த வருகின்றது.
-கடந்த காலங்களில் பாடசாலை சூழல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக இதற்கான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.
-மாணவர்களின் கல்வியை நாங்கள் கருத்தில் கொண்டே நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாது இருந்தது.
-இருந்தும் இப்பொழுது இதற்கான போராட்டத்தை மீண்டும் இன்று (12) நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதுவும் எமது பாடசாலை மாணவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையிலேயே இந்த போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம்.
(12) இந்த போராட்டத்தை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாடசாலையை முடித்துக்கொண்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றோம்.
-அதிபர் ஆசிரியர் சம்பள முறன்பாடு மாத்திரமல்ல மாறாக இன்றைய பொருளாதார நெருக்கடியில் மாணவ சமூகமும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகி கற்றல் உபகரணங்களை கொள்முதல் செய்ய மடியாத நிலையில் இருந்த வருகின்றனர்.
-ஆகவே இந்த மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கற்றல் உபகரணங்கள் வழங்கவும் பாடசாலைகளில் பெற்றோரிடம் பணம் அறவிடுவதையும் தவிர்த்தல் அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தீர்த்தல் இவ்வாறு பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
ஆகவே இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சசனைகளுக்கு தீர்வு எட்டப்படாவிடில் எதிர்வரும் 26ந் திகதி சுகயீன விடுமுறையில் நாடு பூராகவும் ஆசிரியர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இந்த கவனயீர்ப்பு பொராட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன இலங்கையிலுள்ள 101 கல்வி வலயங்களிலும் இவ்வாறன பொராட்டம் இடம்பெறுகின்றது என இவ்வாறு இந்த போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.