1000 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரியின் பாக்கியை மீல்பெறுவதற்கு நடவடிக்கை.

1000 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கியை மீளப் பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சுருக்க அறிக்கையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்

நிதி அமைச்சில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் வருவாயை வசூலிக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும் உள்நாட்டு இறைவரி, சுங்கத் திணைக்களம் போன்றவை இந்த ஆண்டு இலக்கு வருவாயை மீறுவதற்கு ஏற்கனவே வேலை செய்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில அதிகாரிகளாலும் தனிப்பட்ட நபர்களாலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது உண்மையான கருனமாக இருந்தலும் உத்தியோகத்தர்கள் ஒட்டுமொத்தமாக தமது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறான வரி பாக்கிகள் ஏற்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வரி மேன்முறையீட்டு நடைமுறை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய வரித் தொகையும் இதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, நிலுவைத் தொகையை மீட்பதற்காக தற்போதுள்ள நீதித்துறையை விரைவுபடுத்த எடுக்கு வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து  வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு அல்லது அகற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சில வரி பாக்கிகள் சுமார் 25 வருடங்களாக நிலவும் பற்றாக்குறைகள் என தெரிவித்த அமைச்சர், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விஞ்ஞான முறையிலான சுருக்கத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாலும், அது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த்தாக வரும் ஒரு பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்க தயாராகி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.