(எருவில் துசி)
எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவானது 06.06. 2024 நிறைவுற்றது.
பவள விழா தொடர்பான சிறப்பு நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் 08.06. 2024 பாடசாலையில் பவள விழா குழு ஏற்பாட்டில் பழைய மாணவர்களின் முற்றுமுழுதான பங்கு பற்றலில் பல்வேறு கலை கலாசார பரிமானங்களை உள்ளடக்கிய வாகன ஊர்தி பவனி நடைபெற்றது.
வாகனங்கள் தமிழர் கலாச்சாரத்தையும் பாடசாலையின் விழுமியங்களையும் பாடசாலையின் சின்னங்களையும் அடிப்படையாக வைத்து மிகவும் கண்கவர் காட்சியாக வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு எருவில் பாடசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை சென்றடைந்து. அங்கிருந்து இராசமாணிக்கம் சிலையினூடாக வைத்தியசாலை வீதியை வந்தடைந்து. அங்கிருந்து வைத்தியசாலை வாட் வீதி ஊடாக எருவில் கிராமத்திலிருந்து எருவில் பாரதிபுரம் எருவில் சிவபுரம் ஊடாக மகிழூர் கிராமத்தை சென்றடைந்து அங்கிருந்து குருமன்வெளி ஊடாக மீண்டும் எருவில் கிராமத்தை வந்தடைந்தது.
பல்வேறு பிரதேசத்தை சேர்ந்த மக்களும் இதற்கு பெரும் பாராட்டு தெரிவித்ததோடு இவ்வாறான ஒரு நிகழ்வு ஏனைய பாடசாலைக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டுமென பலரும் புலதாங்கிதம் கூறிய அமையும் குறிப்பிடத்தக்கது. எதிர் வருகின்ற காலத்தில் பழைய மாணவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் பவள விழா புத்தக வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.