தமிழர்களுக்கு சமஷ்டி அதிகாரம் இருந்தால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்

சுவிசில் பா.உ சிவஞானம் சிறிதரன்

தமிழர்களுக்கு சமஸ்டி அதிகாரம் இருக்கின்றபோது தமிழர்களால் இலங்கை என்கின்ற நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியும். அதற்கு நீங்கள் எல்லாம் இந்த மண்டபத்தில் சாட்சியாக உள்ளீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் சுவிஸ் டாவோஸ் மண்டபத்தில் நடைபெறும் உலகத்தமிழ் தொழில்முனைவோர், தொழில்வல்லுனர்களின் மகாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கலாநிதி ஶ்ரீ இராசமாணிக்கம் தலைமையில் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பமான இம்மகாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்நது உரையாற்றுகையில்

வடகிழக்கு என்பது தமிழர்களின் பூர்விக நிலம், அது அவர்களுக்கு சொந்தமான நிலம் .எங்கள் மண்ணின் வளர்ச்சிக்கு, பொருளாதார உயர்ற்சிக்கு மண்ணில் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டும்.

அரசியல் சமாதானம் என்பது வடகிழக்கு இணைந்த தாயக மண்ணில்  அவர்களுக்கான அரசியல் உரிமை உறுதிப்படுத்தப்படுவதே, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்ப்படும்போது இலங்கையின் பொருளாதாரம் மட்டுமல்ல  தமிழர்களின் பொருளாதாரத்திலும் தமிழர்களின் உலக  பொருளாதாரத்திலும் மாபெரும் வெற்றியைத்தரும்.

    திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழர்கள் , கப்பலோட்டிய தமிழன் இன்று வியாபார்ரீதியில் உயர்ந்துள்ளோம் என்பதற்கு இந்த மண்டபம் பறை சாற்றுகின்றது.

எங்கள் தேசம் வடகிழக்கு மலையகமக்களையும் ஒன்றிணைக்கின்ற சாம்ராஜ்யம் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் குரலாக அந்தமண் இருக்கின்றது.

வடகிழக்கு மக்கள் அனுபவிப்பது ஒருவகையான நெருக்கடி, மலையகத்தமிழர்கள் சந்திப்பது இன்னொரு வகையான தெருக்கடி. எங்கள் தேசத்தில்90ஆயிரம் போர்விதவைகளும், 12 ஆயிரம் மாற்றுதிறனாளிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

யுத்தம்முடிந்து 15 ஆண்டுகள் ஆனபோதும் தொழில்துறை நோக்கிய பயணம் இன்னும் வடகிழக்கில் கால் ஊண்டவில்லை. யுத்தத்திற்கு முன்பு மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் தமிழர்தேசத்தில் உள்ளபடியால் அவை அனைத்தும் கிடப்பிலே கிடக்கின்றன.

1980ற்கு முன்பு பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் தமிழர்கள் முன்னிலையில் இருந்தார்கள்.

இன்று பல்வேறு சவால்களையும் தாண்டி பீனிக்ஸ்பறவைகள்போல் நாம் மீண்டும் எழுந்து நிற்கின்றோம் அதற்குக்காரணம் தமிழர்களுக்கு உள்ள தைரியம்.

இச்சந்தர்ப்பத்தில் இம்மகாநாட்டை நடாத்திக்கொண்டிருக்கும் எழுமின் அமைப்பு என்ன சிந்திக்கின்றது. நமதுதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,மலைய மக்களின் வாழ்வாரத்தைமேம்படுத்தவும் நாம் என்ன செய்யலாம் என்பதை எழுமின் அமைப்பு சிந்திக்கவேண்டும் என்றார்.