சங்கே முழங்கு என்ற கோசத்துடன் ஆரம்பமான தமிழர் பொருளாதார மகாநாடு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன்  தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய  13வது  பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில்  டாவோஸ் (Switzerland Davos) நகரில்  இன்று ஆரம்பமாகியுள்ளது.

சங்கே முழங்கு என்ற கோசத்துடனும், திருக்குறள் ஒலிக்க ஆரம்பமான நிகழ்வில் உலகின் பலதாடுகளிலிருந்து 500ற்கு மேற்பட்ட தொழில் வல்லுனர்கள் , தொழில் முனைவோர் உட்பட பலபிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் பல்வேறு நாட்டு பிரமுகர்களுடன்  கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல பிரதிநிதிகள் பங்கேற்றி இருந்தனர்.

தொடர்ந்து மூன்றுநாட்கள்  நடைபெறும் இம்மகாநாட்டில் உலகளாவிய தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளனர். IMG_2966