ஆரம்பமாகியது தமிழர் பொருளாதார மகாநாடு

உலகத்தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  எழுமின் அமைப்பினரால்(The Rise)  ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தமிழர்களின் தொழில் வல்லுனர்கள், தொழில்முனைவோரின்  பொருளாதார மகாநாடு இன்று சுவிட்ஸர்லாந்து Davos நகரில் உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் மண்டபத்தில் மகாநாட்டின்  சுவிஸ் நாட்டிற்கான ஒருங்கிணைப்பாளரும்,எழுமின் அமைப்பின் சுவிஸ்நாட்டுத்தலைவருமான கலாநிதி ஶ்ரீ இராசமாணிக்கம் தலைமையில் இன்று ஆரம்பமானது

இன்றைய  ஆரம்ப நிகழ்வில் உலகின் பலபாகங்களிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துரைகளை வழங்கினர்.

இலங்கையிலிருந்து கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இம்மாதம் 9ம்திகதிவரை நடைபெறவுள்ள இம்மகாநாட்டில் 500ற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.