பவள விழாவில் எருவில் கண்ணகி.

(எருவில் துசி) எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் 75வது ஆண்டு பூர்த்தியினை இன்று மிகவும் சிறப்பான முறையில் அதிபர் திரு சி.தீபதர்ஷன் அவர்களின் தலைமையில் கொண்டாடியது.

மட் /பட் /எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டில் தனது 75வது பவளவிழா நிகழ்வினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

இன்றைய தினம் 6.6 2024 மிகவும் கோலாகலமான முறையில் தனது பிறந்த தினத்தினை பாடசாலையிலே கல்வி கற்பித்து நிர்வாகத்துறையில் சிறந்த முறையிலே செயல்பட்ட அதிபர்கள் மேலும் வலய கல்வி பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் மேலதிக கல்வி பணிப்பாளருமாகிய திரு எஸ் புவனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள உதவி கல்வி பணிப்பாளர் திரு சுரேஷ் மற்றும் ஆசிரிய ஆலோசகர் திரு எஸ் .பத்மராஜா முன்னாள் அதிபர்களான திரு சா. பரமானந்தம் திரு சோ. கைலாயபிள்ளை  சி.சத்யநாதன் ஆகியோர் விழாவிலே சிறப்பதிதிகளாக பங்குபெற பாடசாலையினுடைய பவள விழா குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்க மிகவும் சிறந்த முறையிலே இந்த 75வது ஆண்டு பவள விழா நிகழ்வு இடம் பெற்றது. மேலும் பாடசாலையின் பவள விழாவினை முன்னிட்டு நடைபயணமானது. 8 .6 .2024 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இது மட்டுமன்றி பழைய மாணவர்கள் பங்குபற்றும் கிரிக்கெட் மென்பந்து போட்டியும் அதனைத் தொடர்ந்து எட்டாம் மாதம் பவளவிழா நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற இருக்கின்றது.

பாடசாலையிலே இன்று இந்த நிகழ்வு சிறப்புற பழைய மாணவர்களினால் வீதியால் சென்ற அனைத்து உறவுகளுக்கும் பவள விழா சிறப்பினை கொண்டாடும் முகமாக சிற்றுண்டி வழங்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.