( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அபிவிருத்தி குழு கடந்த பல வருடங்களாக செயற்படாதிருந்த நிலையில் தற்பொழுது புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணிகளைக் கொண்டு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முன்னெடுத்து வருகின்றபோதும் இவ்வைத்தியசாலையில் பல தேவைகளும் , ஆளணி பற்றாக்குறைகளும் காணப்பட்டு வருகின்றது என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தன.
இருந்தபோதும் கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த இவ்வைத்தியசாலைக்கு என அபிவிருத்திக்குழு ஒன்று இயங்காதிருந்து வந்ததும் பலரால் நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்பொழுது இந்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான கூட்டம் செவ்வாய்கிழமை (04) மாலை 2.30 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகதத்pன் கேட்போர் கூடத்தில் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.முஹமட் ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-இதன்போது இக்கூட்டத்தில் மன்னார் பொது வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக்குழு தெரிவு இடம்பெற்றது.
இதில் தலைவராக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.முஹமட் ஹனிபா , செயலாளராக திரு.எஸ்.ஜேம்ஸ் ஜேசுதாசன் (முன்னாள் மன்னார் நகர சபை உப தவிசாளர் மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) , பொருளாளராக ஜனாப் என்.நூர்தீன் நூன் (வர்த்தகர்) , உப தலைவராக திருமதி றெஜினா இராமலிங்கம் (ஓய்வுநிலை முன்னாள் கல்வி உதவிப் பணிப்பாளர்) , உப செயலாளராக ஜனாப் எம்.ஐ.ஏ.றசாக் (சமூகப் பணியாளர்) ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக திரு.எஸ்.பத்திநாதன் (போதகர்) திரு அழகிரி சூரியகுமார் (அதிபர்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்நிர்வாகத்தில் பதவிவழி உறுப்பினர்களாக
திரு. மனோகரன் பிரதீப் ( பிரதேச செயலாளர் மன்னார் நகரம்)
திரு. ஓ. றெனால்ட் லெம்பேட் ( செயலாளர் , நகர சபை மன்னார் )
திரு. சு. நிர்மலன் லெம்பேட் ( தொழில்நுட்ப அலுவலர் , கட்டிடங்கள் திணைக்களம் மன்னார் )
திரு புஸ்பகாந்தன் ஜோண் ( விஓஜி மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார்)
திரு. P. அனஸ்லி றொகான் ( கணக்காளர் , மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார் )
திரு. .சீ.வை குரூஸ் (தாதிய பரிபாலகர் , மாவட்ட பொது வைத்தியசாலை , மன்னார் ) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.