( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 55 வருடகால “வாழ்வியல் சங்கிரகம்” வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவு நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தும் இசைத்தமிழ் விழா
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தலைவர் கலாநிதி க.இரகுபரன் தலைமையில் நடைபெற்றது .
அங்கு காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அச்சடித்த அப்பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் முதல் பிரதியை தமிழ்ச் சங்க தலைவர் கலாநிதி க.இரகுபரனிடம் வழங்கி வைத்தார்.
அவ்வமயம் காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி சாஹித்தியரத்னா தி. ஞானசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுவாமி விபுலானந்த அடிகள் எழுதிய பத்து பாடல்கள் அடங்கிய நூலும் அவரது படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.