காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்போருக்கு உறுதி பத்திரங்கள்.

 (வாஸ் கூஞ்ஞ)  கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியினால் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்போருக்கு உறுதி பத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் 1400 குடும்பங்களில் முதற்கட்டமாக 600 குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்குவதற்கான பணிகள் தற்போது இராஜாங்க அமைச்சர் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களின் மன்னார் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் இடம் பெற்று வருகின்றது

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களினால் குறித்த காணி  சம்பந்தமாக நீண்ட காலம் தொடரான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அண்மையில் குறித்த விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியின்  கவனத்திற்கு கொண்டு கொண்டு வந்திருந்தார்

இதன் அடிப்படையில்  தலைமன்னார் பாலமீன் ஓடை பகுதியில் உள்ள 800 குடும்பங்களுக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சோழ மண்டலகுளம் பகுதியில் உள்ள 100 விவசாய குடும்பங்களுக்கு விவசாயம்  மேற்கொள்வதற்காக  குறித்த காணிகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.