“அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறும் ” நூல் வெளியீடு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான் ) குழந்தை எழுத்தாளர் ஒ .கே குணநாதன் எழுதிய 57 வது நூல் “அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறு ” நாவல் வெளியீடு மட்டக்களப்பு  அமிர்தகளி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வு கூத்துக் கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடத்தும் குழந்தை எழுத்தாளர் ஒ கே குணநாதன் எழுதிய 57 வது நூல் ” அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறு ” நாவல் வெளியீடு நிகழ்வு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தமிழறிஞர் தமிழ்மணி அகலங்கன் தமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகளாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கே .மகேசன் , மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் , வைத்திய நிபுணர் பேராசிரியர் கருணாகரன் ,ஆகியோர் கலந்துகொண்டனர்

அதிதிகள் வரவேற்பு நிகழ்வுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கூத்துக் கலைஞரின் நிழலுருவிக்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில்  அமிர்தகளி ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய  குருவின் ஆசியுடன் வரவேற்புரை தலைமையுறையுடன் புத்தக அறிமுகவுரை தொடர்ந்து புத்தக அறிமுகம் இடம்பெற்று புத்தக விமர்சனம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமிர்தகளி ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கமாரினால்
குழந்தை எழுத்தாளர் ஒ கே குணநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.