திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..!

(ஹஸ்பர் ஏ.எச்)
சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது.

மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன்,
பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட  சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நிறை கொண்ட காண்டாமணி வெள்ளிக்கிழமை (31)  திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரிடம்  வழங்கிவைக்கப்பட்டுள்ளது
லண்டன் மாநகர் வாழ் இந்து மக்களின் முன்னெடுப்பில் உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை இந்து மக்களின் பங்களிப்புடனும் , திருக்கோணேஸ்வரப் பெருமானுக்காக லண்டனில் தயாரிக்கப்பட்ட  1000 Kg  நிறையுடைய நவீன முறையில் மின்சாரத்தில் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காண்டா
மணியானது  வெள்ளிக்கிழமை பெருமானின் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபையினரிடம் கையளிக்கப்பட்டது.