(எருவில் துசி) LDSP நிகழ்சி திட்டத்தின் மூலம் அமைக்கப்படுகின்ற களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை அமைப்பு வேலை திட்டத்தினை இன்றைய (01)தினம் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் உள்ளுராட்சி திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
33 .3 மில்லியம் ரூபா செலவில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்படுகின்ற கட்டிடத்தினை பார்வையிடுவதற்காக உலக வங்கியின் சிரேஷ்ட ஆலோசகர் கனிஷ்க மற்றும் திட்டத்தின் உடைய பொறியியல் துறை சார்ந்த ஆலோசகர்கள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர்ஜி.பிரகாஷ் திட்டத்திற்கு பொறுப்பான ம பொறியியலாளர் S.ராஜகோபால் பிரதேசபை செயலாளர் சா. அறிவழகன் தொழிநுட்ப உத்தியோகத்தர்மா.தயாபரன்முதலி சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகனேசன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.துசியந்தன் வேலைகள் மேற்பார்வையாளர் R.ஜெயரூபன் ஆகியோருடன் ஒப்பந்ததாரரான தர்ஷன் கொண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தார் இந்த வேலை திட்டத்தினை சிறப்பான முறையில் மேற்கொள்வதாகவும் 13 .5. 2024 அன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாகவும் திட்டம் எதிர் வருகின்ற எட்டாம் மாதம் நிறைவடைய உள்ள காரணத்தினால் விரைவாக வேலைகளை மேற்கொள்ளுமாறும் மேற்கொள்ளப்படுகின்ற வேலைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றது இதேபோன்று தொடர்ச்சியாக விரைவாக வேலைகளை மேற்கொள்ளுமாறும் சிறப்பான முறையில் அமைக்கப்படுகின்ற இந்த கட்டிடத்தில் தொழில் புரிகின்ற சபையின் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் போன்றோருக்கு தமது வாழ்த்துக்களை உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி திணைக்களங்களிலே மேற்கொள்ளப்படுகின்ற குறித்து அபிவிருத்தி திட்டம் பல மில்லியன் ரூபாக்களை கொண்டு மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடதக்கது.