மொட்டுக் கட்சியில் பயணித்த ​ றிஸ்லி முஸ்தபா மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டார் எனினும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை சுமார் 4500 வாக்குகளை பெற்று அக்கட்சியில் இணைந்து செயல்பட்டார். தற்போது இவர் அக்கட்சியை விட்டுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் சிறப்பு நிகழ்வு சாய்ந்தமருது பாபா றோயல் வரவேற்பு மண்டபத்தில் (31) மாலை நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அயூப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், அம்பாறை மாவட்ட  மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்), முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக எம்.ஐ.எம். மாஹிர், எம்.எஸ்.எம்.சுபைர் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உயர் பீட உறுப்பினர்கள், உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள் மாற்றும் றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.