போதைக்கும் , புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். கவனயீர்ப்பாக மரதனோட்டப் போட்டி

( வாஸ் கூஞ்ஞ)

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு  தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களம் போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என்பதை மக்களின் கவனயீர்ப்புக்காக மரதனோட்டப் போட்டியை மன்னாரில் நடாத்தியது.

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு  தினத்தை முன்னிட்டு போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களம் மன்னாரில் மாபெரும்   மரதன் ஓட்டப்போட்டியை நடாத்தியது.

இப்போட்டியானது வெள்ளிக்கிழமை (31) காலை 7 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தாராபுரம் மற்றும் கீரி என்னும் கிராமத்துக்கு ஊடாக மீண்டும் மன்னார் மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார்  மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

முதல் 10 இடங்களுக்குள் வந்த வீரர்களுக்கு சான்றிதழ்களும்  பணப்பரிசீல்கள் அரசாங்க அதிபர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது..

மேலும் இந்நிகழ்வில்  பிரதம உள்ளக  கணக்காய்வாளர் , திட்டமிடல் பணிப்பாளர் , சமுர்த்தி திணைக்கள  முகாமையாளர் ,  சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்