( வாஸ் கூஞ்ஞ)
அகில இலங்கை சமாதான நீதவானாக யாழ் மாவட்டத்தைச் சார்ந்த கணக்காளர் திரு.எஸ்.யூ.சந்திரகுமாரன் கொழும்பு மாவட்ட நீதிபதி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
கடந்த செவ்வாய் கிழமை (28) அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியபிரமாணம் செய்து கொண்ட இவர் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும்.அரச சேவையில் ஒரு ஆசிரியராக பணியை ஆரம்பித்து பின் கணக்காளராக மன்னார் , யாழ்ப்பாணம் , மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கடமையாற்றியதுடன்
இவர் ஓய்வுபெறுவதற்கு முன் பொது நிதி திணைக்களம் . திறைச்சேரி . நிதி பொருளாதார நிலைப்படுத்துதல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியிருந்தார்.
தற்பொழுது இவர் நிதி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பிரதி திட்டப் பணிப்பாளராக கடமைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.