மட்டக்களப்பு லியோ கழகத்தால் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Waste to use திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கடதாசிகள்,பாவித்த அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கார்ட் போட் மட்டைகள் என்பவற்றை மீழ் சுழற்சி செய்து அதிலிருந்து கிடைத்த நிதி மூலம் முதற்கட்டமாக மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அண்மையில் பாடசாலை உபகரணங்கள்,ஆடைகள் மற்றும்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கி(28) வைக்கப்பட்டன.
மேலதிகமாக கிடைக்கப் பெற்றுள்ள கோரிக்கைகளுக்கு எதிர்காலத்தில் ஏனைய பிரதேச மாணவர்களுக்கும் இத் திட்டம் தொடரும் எனவும்,வறுமை காரணமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டு பெற்றோருடன் கூலி வேலைகளில் ஈடுபடுவதனை எவரும் அனுமதிக்க முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எனவே இவ்வகையான பொருளாதாதர ரீதியில் பாதிக்கப்பட்டு எல்லோரிடமும் உதவி கேட்க முடியாத நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தடையாக உள்ள காரணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வசதிபடைத்த அனைவரும் முன்வர வேண்டும்.