மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் விளையாட்டு விழா.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகத்தில்  பிரதேச மட்ட உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தலைமையில் விளாவெட்டுவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) திகதி இடம் பெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்தும் உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு , வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.இப் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட 14  விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் தமது விளையாட்டு திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இப் போட்டிகள் வருடாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஞ்சிரங்குடா ஜெகன் மற்றும் பனையருப்பான்  கஜமுகன் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில்  இடம் பெற்ற சுற்றுப் போட்டியில் ஜெகன் விளையாட்டுக் கழகம்   வெற்றி பெற்று கிண்ணத்தை தனகாத்தியது.

இதன் போது  வெற்றி பெற்ற  வீரர்களுக்கு அதிதிகளினால் விருதுகளும் பணப்பரிசிக்களும் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு கெளரவமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன்  மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ். யோகராஜா, கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், நிருவாக  உத்தியோகத்தர் டி.துரைராஜ்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கழகங்களின் அங்கத்தவர்கள்  எனப் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024-05-29 at 10.14.25.jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.31.jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.24.jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.28.jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.23 (1).jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.23.jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.22 (1).jpegWhatsApp Image 2024-05-29 at 10.14.22.jpeg