(எம்.எம்.ஜெஸ்மின்) மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியின் ஊடாக பல்வேறு வீதிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உலக வங்கியின் ஊடாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதன் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திகள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்தபோது நஸீர் அஹமட் உலக வங்கியின் நிதி ஒதுக்கீடு ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சராக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மீராகேணி பிரதான வீதி , குடியிருப்பு காளிகோயில் வீதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக உலக வங்கியின் உள்ளக இணைப்பு அபிவிருத்தி திட்டத்தின் (ICDP) கீழ் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீராகேணி பிரதான வீதியில் 2.10 கிலோமீற்றர் தூரம் வரையான வீதிக்கு 130.67 மில்லியன் ரூபா செலவிலும்,குடியிருப்பு, காளி கோயில் வீதியில் 3.45 கிலோமீற்றர் 246.99 மில்லியன் ரூபா செலவில் கார்ப்பட் இடப்படவுள்ளன.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மேற்குறித்த வீதிகளின் கார்பட் இடும் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.