தமிழர்களின் பெருமைகளையும் அவர்களது வாழ்வியல்களையும் அடுத்த காலத்திற்கு கடத்துகின்ற ஆற்றல் இலக்கியத்திற்கும் மட்டும்தான் உள்ளது

  நிறைதமிழ் பெருமாள் இராஜேந்திரம்

தமிழர்களின் பெருமைகளையும் அவர்களது வாழ்வியல்களையும் அடுத்த காலத்திற்கு கடத்துகின்ற ஆற்றல் தமிழ்மொழிக்கும் அதன் இலக்கியத்திற்கும் மட்டும்தான் உள்ளது என்பதை நாம் நம்பவேண்டும் என  நிறைதமிழ் பெருமாள் இராஜேந்திரம் தெரிவித்தார்.

மலேசியாவின் மக்கள் ஓசை நாளிதழின் மேனாள் ஆசிரியரும்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவரும்,சங்கத்தின் அயலகத் தொடர்புக்குழுத் தலைவருமாகத் திகழும் பெருந்தமிழர் திரு.பெருமாள் இராஜேந்திரன் அவர்கள் எழுதிய “மந்திரக் கணங்கள்” எனும் நூலின் அறிமுகவிழா சுவிஸின் முக்கிய ஆளுமை மிக்க பிரமுகர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாகவும்,சிறப்பாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை  சுவிஸ் சூரிச்நகரில் நடைபெற்றது.
தமிழுக்காக உயிர் நீர்த்த மக்களுக்காகவும்,இந்த விழாவில் கலந்துகொள்ள இருந்து மறைந்த தொழிலதிபர் அமரர்.வேலா வரதனுக்காகவும் மெளனாஞ்சலியுடன் விழா தொடங்கப்பட்டது.
சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின்  ஏற்பாட்டில்  அதன் தலைவர் கல்லாறு சதீஷ் அவர்களின் வழிநடத்தலில் ஊடகவியலாளர்
திரு.வேதநாயகம் தந்தியான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பெருமாள் இராஜேந்திரம் தொடர்ந்து உரையாற்றுகையில்

நூல்கள் படைப்புக்கள் இல்லாவிட்டால் எப்படியான  ஆற்றல் மிக்க தலைவனையும் நாம் எதிர்காலத்தில் அடையாளப்படுத்த முடியாமல் போய்விடும். அன்று அரசர்கள் இலக்கிய படைப்புக்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். இன்று வர்த்தர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.வர்த்தகர்களும் படைப்பாளிகளும் ஒரே கோட்டில் பயணிப்பதன் ஊடாகவே இது சாத்தியமாகும்.

உலகத்தில் வாழுகின்ற தமிழர்களின் சிறப்புக்களை அவர்களின் உன்னதமான உயரமான கொள்கைகளை மாண்புக்களை வெளிப்படுத்துவது அல்லது இன்றளவும் வாழ வைப்பது தமிழர்களின் வீரம்  மூளை மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களுமே காரணம்.

இன்று நம்மவர்கள் மத்தியில் சமுகத்தில் தமிழுக்கும் ஏனைய துறைகளுக்கம் தொண்டாற்றுபவர்களை வாழும்போதே வாழ்த்தும் மரபினை நமது இளைய தலைமுறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிலவார்தைகள் வெல்லும் சிலவார்த்தைகள் கொல்லும் உங்கள் வார்த்தைகள் என்னையும் என் தமிழையும் வெல்லவைத்துள்ளது. தமிழுக்கு தொண்டு செய்தவன் சாகுவதில்லையென தமிழன் சொல்லுவான் உலகில் எந்தவொரு இனத்திலும் இவ்வாறான சொல்லாடல் இருப்பதாக நான் அறியவில்லை என்றார்.

நிகழ்வில்
மலேசியத் தமிழ் மக்கள்,இலங்கைத் தமிழர்களுக்குக் கடந்த காலங்களிற் செய்த உதவிகளுக்குக் கல்லாறு திரு.சதீஷால் நன்றி கூறப்பட்டது.
விழாவில் “மந்திரக்கணங்கள்”நூலின் ஆய்வுரையைப் பிரதம விருந்தினர் பேர்ன் வள்ளுவன் பாடசாலை அதிபர் பூநகரியான் திரு.பொன்னம்பலம் முருகவேள் வழங்க,மதிப்புரையைப் பிரதம விருந்தினர் விரிஎஸ் நிறுவனத் தலைவர் திரு.கந்தசாமி விநாயகமூர்த்தி (கவிஞர்.கவி குமார்)நிகழ்த்தினார்.
தொடர்ந்து விழாவின் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்ட உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் சுவிஸ் தலைவர் ஶ்ரீ இராசமாணிக்கம்,கல்வியாளர் அருந்தவராஜா கந்தையா,மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி சுவிஸ் பக்திபீடத்தலைவர் திரு.சுரேஷ் செல்வரட்ணம்,ஊடகவியலாளர் திரு.சண் தவராஜா,தமிழ் நாடகக் கல்லூரியின் சுவிஸ் தலைவர் திரு.அன்ரன் பொன்ராஜா,34 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதியும்,இந்து மகாசபையின் சுவிஸ் தலைவருமான ஆசிரியர் திரு.கணபதிப்பிள்ளை கணா ,சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் இணுவையூர் திரு.மயூரன்,ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினார்கள்..
மேலும்;சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த
சுவிஸ் இந்து மகா சபைப் பொருளாளர் கவிஞர் அருள் நந்தன்,சுவிஸ் தமிழ் ஊடக மன்றத் தலைவர் ஜெராட் ஜெயவீரசிங்கம்,
மின்னல் 24 ஊடகத்தலைவர் சந்திரசேகரம் சந்திரப்பிரகாஷ்,கல்வியாளர் திருமதி.கோகிலா தவராஜா,கல்வியாளர் திருமதி.நந்தினி முருகவேள்,ஊடகப் பிதாமகன் மதிப்பிற்குரிய ஜீவேந்திரன்,சமூக ஆர்வலர்கள் பிறைசூடி தம்பதியினர்,சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் அசோக் லூயிஸ் ஆகியோர் நூல்களை வழங்கி வைக்க, ,ஹவுஷ் மாஷ்ரர் நிறுவன அதிபர் திரு.உதயன்,சூர் அல்ரன் தவர்னே நிறுவன அதிபர் பஞ்சாட்சரம் ஶ்ரீகாந்தன் இந்துமதி தம்பதி,சுவிஸ் ஐ.ரி.ஆர் வானொலி நிறுவன அதிபர் ஜெனோகரன் ஜெனார்த்தன் தம்பதி,பொறியியலாளர் திரு.நடேசலிங்கம் சித்ரவேல்,கல்வியாளர் திரு.அருணாசலம் திலக்குமார்,சமூக ஆர்வலர்கள் தர்மலிங்கம் பிரபாகரன் அஞ்சலா தம்பதிகள்,சமூக ஆர்வலர் ,நூலாசிரியர், பொலிகை திரு.ஜெயா,கவிஞர் கதிர் லோகன் ,புகைப்படக் கலைஞர் அமரதாஸ்,லுசேர்ன் கவிஞர் திரு.ரவி,பிள்ளையார் மணவறை திரு.இராதாகிருஸ்ணன் உட்பட பலர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
பூநகரியான் முருகவேள் பொன்னம்பலம் மந்திரக்கணங்கள் நூலாசிரியருக்குப் பொன்னாடை போற்றிக் கெளரவித்ததுடன் பூமாலையும் சூட்டி வாழ்த்தையும்தெரிவித்தார்.
சுரேஷ் செல்வரட்ணம் மந்திரக்கணங்கள் நூலாசிரியர் பெருமாள் இராஜேந்திரன் தம்பதியினருக்குப் பொன்னாடை போற்றிக் கெளரவித்தார்.
சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் ,நூலாசிரியர் திரு.பெருமாள் இராஜேந்திரன் அவர்களுக்கு நிறை தமிழ் என்று விருது வழங்கிக் கெளரவித்தது.
சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் தனி விழா எடுத்து விருது வழங்கும் ஆறாவது நிகழ்வு இது என்று அதன் தலைவர் கல்லாறு சதீஷ் விருதுரையில் குறிப்பிட்டார்.
அன்ரன் பொன்ராஜா,கந்தையா அருந்தவராஜா,சண் தவராஜா,அமரதாஷ் ,பூநகரியன் பொன்னம்பலம் முருகவேள்,ஆகியோர் தங்களுடைய நூல்களை பெருமாள் இராஜேந்திரனுக்கு பரிசாக வழங்கிக் கெளரவித்தனர்.

வெற்றியாரம் இயக்குனர் வைகுந்தன் செல்வம்  உட்பட நிகழ்வில் மேலும் பலர் கலந்து கொண்டனர்.
முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா எனும் எழுத்தாளர் கல்லாறு சதீஷைத் தலைவராகக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக இயங்கும்,
சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் இந்த விழாவை மிகக் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தது.