கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமை மீட்பு போராட்ட களத்தில் இன நல்லுவு.

(சுமன்) கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமை மீட்பு போராட்ட களத்தில் போராட்டத்தின் மத்தியிலும் இன நல்லுறவை வளர்ப்பதிலும் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்கள் தவறவில்லை.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உரிமை மீட்பு போராட்டம் 62 நாட்களைக் கடந்தும் எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்ற நிலையில் போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களால் வெஷாக் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் வெசாக் தினத்தன்று குளிர்பாணம் பிஸ்கட் என்பன வழங்கி வெசாக் தினத்தினைச் சிறப்பித்தனர். அதேபோன்று இன்றைய நாளில் மரவள்ளிக் கிழங்கு அவியல் சம்பளுடன் வழங்கியதுடன், வீதியில் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கும் அவை பரிமாரப்பட்டது.

இந் நிகழ்வு மிகச் சிறப்பான முறையிலே அதிகளவிலான போராட்டக்காரர்களின் பங்குபற்றுதலுடன் வீதியின் இருமருங்கிலும் நின்று வீதி போக்குவரத்திலே ஈடுபட்ட பொதுமக்களுக்கு இவற்றை வழங்கி வெஷாக் தன்சல் நிகழ்வை முன்னெடுத்து தங்கள் இனநல்லுறவை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதன்போது அதிகளவிலான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.