மட்டக்களப்பு பிரசைகள் சபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் மட்டக்களப்பு பிரசைகள் சபைத்தலைவர் கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மங்களராம பௌத்த மதகுரு, மௌலவி, பழுகாமம் மகாவிஷ்ணு ஆலய பிரதம வண்ணக்கர் விக்னேஸ்பரன், அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் றொக்சன் சிவதர்ஷன், எல்ரோய் பாஸ்டர் ரவி, பாஸ்டர் விக்டர் இன்னும் பல பாஸ்டர்களுடன் மட்டக்களப்பு இணையத்தின் உபசெயலாளர் யோகிதா, பிரசைகள் சபை உறுப்பினர் கோமளா மற்றும் பெண்கள் சிறுவர்கள் என பலர் இறுதிவரை கலந்து கொண்டனர்.
நேற்று 18ஆம் திகதி மாலை நடைபெற்ற இந் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.