இன்று சம்மாந்துறைக்கு புதிய வலயகல்வி பணிப்பாளர் ஜாபீர் நியமனம்.

( வி.ரி.சகாதேவராஜா)   சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் புதிய தற்காலிக வலயகல்விப் பணிப்பாளராக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (17) வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு வருகை தந்து கடமையேற்றுக்கொண்டார்.
 ஏலவே கடமையில் இருந்த வலயக்கல்விப்பணிப்பாளர் DR:S.M.M.உமர் மௌலானா கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
 அந்த வெற்றிடத்தை நிரப்புமுகமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் இத் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பணிப்பாளர் ஜாபீர், ஏலவே சம்மாந்துறை வலயத்தில் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சிலகாலம் கடமையாற்றி இருந்தார்.
இன்று அவர் கல்முனை வலய கணக்காளர் ஹபீபுள்ளாஹ் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் சகிதம் வருகை தந்தார்.
அவரை கல்விசார் உத்தியோகத்தர்கள் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எச்.நைரூஸ்கான் திருமதி நிலோபரா சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டி வரவேற்றார்கள் . கல்வி பணிமனை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒன்றுகூடல் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.