உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாக தம்பலகாமம் பிரதேச அணி முடி சூடியது.

(ஹஸ்பர் ஏ.எச்)    மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியன் பட்டத்தை முடி சூடிக்கொண்டது .
குறித்த போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் நேற்று (13) இடம் பெற்றது .மாவட்ட மட்ட போட்டியில் சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்பு சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள
ஆறு பிரதேச செயலப் பகுதிகளை உள்ளடக்கிய அணிகள் பங்கு பற்றிய நிலையில் இறுதிப் போட்டியில் திருகோணமலை ,தம்பலகாமம் அணிகள் பங்குபற்றிய நிலையில் 5:0 என்ற நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி மாவட்ட மட்ட சம்பியனாக தெரிவாகினர். இவ் அணி மாகாண மட்டத்தில் இடம் பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் குறித்த விளையாட்டு வீரர்களை திறம்பட பயிற்சியளித்து வழிநடாத்தினார்.