அகில இலங்கை சமாதான நீதவான் வடிவேல் மணிகரன் இன்று (13.05.2024) திடீர் மரண விசாரணை அதிகாரியாக நீதி அமைச்சர் கெளரவ.கலாநிதி விஜயதாச ராஜபக்சே அவர்களின் முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளார்.
இவர் வடிவேல்-ஞானம்மா தம்பதிகளின் புதல்வனும் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் பழைய மாணவனும், முன்னாள் களுவாஞ்சிகுடி வர்த்தக சங்க செயலாளரும், பட்டிருப்பு வுளூடயமன் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் செயலாளரும், பட்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்னாள் செயலாளரும், பட்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் என்பதுடன் சிறந்த அறிவிப்பாளர், பேச்சாளர்,கவிஞர், சமூக சேவகர், சமூக ஆர்வலர் என பன்முக ஆளுமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.