கிண்ணியா விவசாயிகள் முதன் முறையாக ட்ரோன் கெமரா தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தொளிப்பு.

(ஹஸ்பர் ஏ.எச்)  முதன் முறையாக கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது நெற் பயிர்ச் செய்கைகளுக்கு கிருமி நாசினியை விசிரினர். கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பீங்கான் உடைந்தாரு,வன்னியனார் மடு விவசாய நிலத்தில் கலை கொள்ளிகளை  (12)  விசிரினர். ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக இதனை முன்னெடுத்ததாகவும் இதன் மூலம் புதிய அனுபவம் பயிற்சிகளை பெற்றதாகவும் அப் பகுதி விவசாய சம்மேளன ஊடக பேச்சாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
பல ஏக்கர் வயல் நிலங்களுக்கு நெற் செய்கையின் போது சிறந்த அறுவடை இதன் மூலம் கிடைக்கப் பெறவும் இலகுவாகவும் புதிய தொழில் நுட்பம் ஊடாக முன்னெடுப்பது இதுவே முதன் முறையாகும் என்பது கிடைக்கத்தக்கது.