கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்.

(ஹஸ்பர் ஏ.எச்)   அண்மையில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து இடம் பெற்றது.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் இதன் போது கிழக்கு ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டது.