கனடாவில் மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஈழவேந்தனுக்கான நினைவஞ்சலி நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச்) கனடாவில் மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் எம்.கே.ஈழவேந்தனின் நினைவஞ்சலி  (12) திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சீனன் வெளி விநாயகர் கோயிலில் இடம் பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட கட்சியின்  முன்னால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் தொண்டர்கள் ,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதமளவில் கனடாவில் மறைந்ந முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனை நினைவு கூறும் வகையில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.