(ஹஸ்பர் ஏ.எச்) பிரித்தானிய தூதரகத்தின் முதல் செயலாளர் தொம் சோப்பர் அவர்களின் தலைமையிலான குழுவினர் (09) திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனைக்கு விஜயம் செய்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நில ஆக்கிரமிப்பு சிக்கல்கள் ,வேலை வாய்ப்பு பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக திருகோணமலை மாவட்டத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களோடு உரையாடி அறிந்து கொண்டார்கள் இந்த கலந்துரையாடலானது ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்றது.
