காரைதீவு வைத்தியசாலையில் 40 லட்சம் ரூபா செலவில்  அடிக்கல் நாட்டு விழா.

( வி.ரி.சகாதேவராஜா)     காரைதீவு வைத்தியசாலையில் சுமார்  4 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய தாழ்வாரம் (coridoor) ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் நடராசா அருந்திரன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.
 பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் கலந்து சிறப்பித்தார் .
 இது பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள  வைத்தியசாலை காணியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் பழைய கட்டிடத்தொகுதியையும் இணைக்கும் வகையில் இது அமைக்கப்படவுள்ளது.
 இது நிர்மாணிக்கப்பட்ட பின்னர்    புதிய  கட்டிடம் வெளிநோயாளர் பிரிவாக பயன்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வடிக்கல் நாட்டு நிகழ்வில்
வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.